100 நாட்கள் உபவாசத்தில் அவர் பிரசன்னத்தில் களிகூறுவோம். “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்…” எசேக்கியேல் 22:30. கொந்தளிப்பான மற்றும் முன் சம்பவிக்காத காலங்களின் தொற்றுநோய், அரசியல், பொருளாதாரம், ஆவிக்குரிய மற்றும் சமூக சூழ்நிலைகளில்; நாம் நம்முடைய ஜெபத்தை சரியான முறையில் நிலைப்படுத்த வேண்டும். “அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும்,… அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம், எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.” எஸ்றா 8:21-23 வசனத்தின் பிரகாரம் இஸ்ரவேலைப்போலவே, நம் தேசத்தின் தேவைகளுக்காக தாழ்மையுடன் உபவாசம் எடுக்க வேண்டும். உபவாசம் என்பது ஒரு அவசியமான ஆவிக்குரிய ஒழுக்கம். நாம் உபவாசம் எடுக்கும்போது, அவரை நோக்கி பார்க்கும்படிக்கு அவருடைய பிரசன்னத்தில் இருக்க நேரத்தை ஒதுக்குகிறோம். நுமக்கு தேவையான அனைத்திற்கும் நாம் அவருடைய பிரசன்னத்தில் உபவாசித்து களிகூறுகிறோம். நாம் அவரை தேடுவது மட்டுமின்றி அதிகமாக அவரை தழுவுகிறோம்.
முதல் கட்டம்: 18ஆம் ஜுலை – 6ஆம் ஆகஸ்ட்டு (20 நாட்கள்)
இரண்டாம் கட்டம்: 7ஆம் ஆகஸ்ட்டு – 15ஆம் செப்டம்பர் (Nநுஊகு 40 நாட்கள்)
மூன்றாம் கட்டம்: 16ஆம் செப்டம்பர் – 25ஆம் அக்டோபர் (40 நாட்கள்)